ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் வாழை மரங்கள் சேதம்; திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆறுதல்

ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.


Coimbatore:

கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை மேற்கு ஒன்றியம், ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று (மே.11) பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.






இந்த நிலையில் சேதமமடைந்த பகுதிகளை இன்று (12.05.2024) இந்தியா கூட்டணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சக்திவேல், குகநந்து, ரவி, சத்தியமூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

உடன் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ். சேனாதிபதி அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...