உடுமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது

தாத்தா பாட்டியுடன் வசித்த வந்த 17வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடன் உடுமலை பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு நபர்கள் பாலியல் தொடர்பில் இருந்து உள்ளனர். இதில் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பாட்டி விசாரித்த போது, இது குறித்து சிறுமி தெரிவித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் காளீஸ்வரன்(19), மதன்குமார்(19), பரணிகுமார்(21), பிரகாஷ்(24), நந்தகோபால்(19), பவா பாரதி(22) மற்றும் 14,15,16 ஆகிய வயது சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...