சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளார்.


கோவை: சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மே.13 காலை சவுக்கு சங்கரை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...