பொள்ளாச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு தினங்களாகவே வெயிலின் தாக்கம் மாறி மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் பொள்ளாச்சி நகரமே இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.



சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்லடம் சாலை, பொள்ளாச்சி உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். மேலும் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த கோடை மழையானது தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...