கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகம்

கோவை, திருச்சி சாலையில் அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசுகியின் நான்காவது தலைமுறை எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் மாடலானது திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோவில் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் ராஜேஷ் ஜெயராமன் மேலாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பிரசன்ன பாலசந்திரன், தினேஷ் மற்றும் சிவா உட்பட பலர் கலந்துகொண்டு நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் புதிய எபிக் ஸ்விப்ட் மாடலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அறிமுகமாக்கப்பட்டன. காரின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் பல்வேறு நுட்பங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.



ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இந்த கார் வெளிப்புற மாற்றங்களில் கோண முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட கிரில், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒன்பது இன்ச் ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும், புதிய ஸ்விஃப்ட் ஆறு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல் டோன்களுடன் கூடிய ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்; இது ஸ்போர்ட்டி மற்றும் டைனமிக் டிரைவிங் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...