கோவையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது; கோவைக்கு முதலிடம்..!

இந்த தேர்வில் கோவை மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Coimbatore: தமிழகம் மற்றும் கோவையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) காலை வெளியிடப்படப்பட்டது. தமிழகத்தில் 8,11,172 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில்87.26 சதவீதம் பேரும், மாணவிகள் 94.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் கோவை மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இதற்கு அடுத்த இடங்களில் ஈரோடு 95.56%, திருப்பூர் 95.23%,விருதுநகர் 95.06%,அரியலூர் 94.96%,பெரம்பலூர் 94.82%,சிவகங்கை 94.57%,திருச்சி 94.0%,குமரி 93.96%,தூத்துக்குடி 93.86% ஆகியவை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, காலை 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கான, அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை, இன்று காலை 10:00 மணிக்கு, தங்கள் அடையாள எண், பாஸ்வேர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...