கோவை சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை, போதை மருந்து கடத்தல் – 3 பேர் கைது

2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 போதை ஊசிகள் ஆகியவற்றை கடத்தி வந்த மூன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பன் வீதியில் நேற்று மே.13 மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 24), இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த விஷால் என்ற சந்தோஷ் (வயது 29), வெங்கிட்டபுரம், சாஸ்திரி ரோடுதுரைசாமி என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2 பைக்குகள், போதை மருந்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...