வெள்ளகோவில் அருகே கோர்ட் ஊழியரின் கணவர் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைப்பு - மருத்துவமனையில் அனுமதி

மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாக காவல்நிலைத்தில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த நீதிமன்ற ஊழியரின் கணவன் உறவினருடன் சென்று, சக்திவேல் என்வரின் மண்டையை உடைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே உள்ளது லக்கமநாயக்கன்பட்டி. இங்கு வசித்து வருபவர் சக்திவேல் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களது வீட்டின் அருகே குடியிருந்து வருபவர் ரமேஷ் அவருக்கு அமுதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளது. அமுதா நீதிமன்றத்தில் பணிபுரிவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சக்திவேல் மனைவி வித்யாவிடம் ரமேஷ்குமார் தவறாக நடக்க பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சக்திவேலிடம் வித்யா கூறியதைத் தொடர்ந்து சக்திவேல் ரமேஷ்குமாரை தொலைப்பேசியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்க்கே வந்து மிரட்டியும் சென்றுள்ளார்.

இதுகுறித்து சக்திவேல் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள் ரமேஷ்குமாரை எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உறவினர் லோகேஷை அழைத்துக்கொண்டு நேற்று இரவு சக்திவேல் வீட்டு கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே நுழைந்து சக்திவேலின் மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மனைவி வித்யா மற்றும் குழந்தைகளையும் கீழே தள்ளிவிட்டு நீ எந்த காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தாலும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என் மனைவி அமுதா நீதிமன்றத்தில் வேலை செய்து வருகின்றாள் என கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக வித்யா புகார் தெரிவித்துள்ளார்.

காயம்பட்ட சக்திவேலுவை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைஅளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிச்சைபெற்று வருகிறார்.

இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ரமேஷ் தன்னையும் தாக்கி விட்டதாகக் கூறி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றத்தில் தனது மனைவி பணியாற்றுகின்றார் என்று அருகில் உள்ள வீட்டில் இருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிப்பது தவறானது என்று காவல்துறை புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது அடிதடி பிரச்சனை நடந்திருக்க ஏற்பட்டிருக்காது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...