தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சுமார் 210 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகின்றன.



தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில் குமார், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 184 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வாகன ஓட்டுனர்களின் (டிரைவிங் லைசென்ஸ்) ஓட்டுனர் உரிமம் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது.



அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். இன்று நடைபெற்ற ஆய்வில் 3 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது என வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...