உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் காவல் ஆய்வாளரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

பாலியல் வழக்கு தொடர்பான தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியதாக பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12-ம் தேதி 17 வயது சிறுமி தொடர்பான பாலியல் வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சில இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, தகவல் தர மறுத்து காவல்நிலையத்திற்குள் வரக்கூடாது, உங்களுக்கு எந்த தகவலும் தர முடியாது வெளியே போங்க என்று கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த செயலை கண்டித்து உடுமலை அனைத்து பத்திரிகையாளர்களும் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை DSP சுகுமாரன், குடிமங்கலம் ஆய்வாளர் கீதா, பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை கொடுக்கவும், மரியாதையாக நடத்தவும் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். உடுமலை மகளிர் காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...