உக்கடம் அல் அமீன் காலனி பகுதிகளில் ஆலங்கட்டி மழை - துள்ளி குதித்து விளையாடிய குழந்தைகள்

கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக உக்கடம் மற்றும் அல்-அமீன் காலனி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது, வீட்டின் மாடிகளில் மழையில் துள்ளி குதித்து குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேவர தயக்கம் காட்டினார்கள். மேலும் வீட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக லேசான மழை பெய்து வந்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இருப்பினும் காலை மற்றும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் இன்று மாலையில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.



அதிலும் குறிப்பாக உக்கடம் மற்றும் அல்-அமீன் காலனி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் கோவையில் குளிச்சி நிலவியது.



இதனால் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.



மேலும் வீட்டில் இருந்த குழந்தைகள் தங்களது வீட்டின் மாடிகளில் மழையில் துள்ளி குதித்து உற்சாகமாக மழையில் நனைந்து விளையாடி மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...