சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு; பெண் காவலர்களுடன் திருச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார்

கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ள நிலையில், பெண் காவலர்களோடு திருச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார்


Coimbatore: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது (மே.15) பெண் காவலர்களுடன், சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து செல்லப்படுகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...