கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

நீதிமன்ற உத்தரவை கொடுக்க சென்ற கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாதவன் என்பவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று (மே.14) சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர், இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த மாதவன் என்ற தக்காளி மாதவன் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...