கரிவரதராஜா பெருமாள் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு

கரிவரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி பத்ரிநாராயணனிடம் இன்று (மே.15) மனு அளித்தனர்.



அந்த மனுவில், எங்கள் பகுதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகம் திருப்பணி கமிட்டி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. ஆனால், சிலர் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். எனவே, கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...