உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் சுகந்தி புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்தது தொடர்பாக கடந்த 12-ம் தேதி மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.



அதைத் தொடர்ந்து இன்று அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம், ஜீவிகா அமைப்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.



அப்போது அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை செயலாளர் சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உடுமலையில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

போதை வஸ்துக்கள் பள்ளி கல்லூரிகள் பகுதியில் விற்பனை செய்வதால் சிறார்கள், இளைஞர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதை வஸ்துக்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட உடுமலை தங்கும் விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி சாட்சிகளை பலப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை.

அவர்கள் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு காவல்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கை ஆறு மாத காலத்திற்குள் விரைவாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் பிணையில் வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே அவர்கள் பிணையில் வராமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகள், பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குழந்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். பாலின சமத்துவம் குறித்த பாடத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் பவித்ரா, மாநில குழு உறுப்பினர் பானுமதி, மாதர் சங்க மாநில நிர்வாகிகள் கிரிஜா, இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் தாராபுரம் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...