கொளத்துப்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை - கட்டுப்படுத்துமாறு தாராபுரம் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

கொளத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றுள்ளது. ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் 14 ஆவது வார்டு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் குலுக்குப்பாளையம், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை பகல் நேரங்களில் காடுகளில் மேய்த்து இரவு நேரங்களில் மூங்கில் பட்டியலில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் இடைச்சாமி என்பவரது தோட்டத்தில் 21 ஆடுகளையும், முத்து என்பவரது நான்கு ஆடுகளையும், லிங்கசாமி என்பவரது ஐந்து ஆடுகளையும், பீட்டர் குமார் என்பவரது மூன்று ஆடுகளையும், பாலு என்பவரது நான்கு ஆடுகளையும், நாட்டு துறை என்பவரது 3 ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்து கொதறியது. இந்நிலையில் இன்று காளியாத்தாள் என்பவரது ஆடு மற்றும் குட்டி என ஆடுகளை கடித்து சேதப்படுத்தி கொன்றுவிட்டது.

எனவே கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று குவித்துள்ளது. எனவே எங்கள் பகுதியில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடு வளர்ப்பை முற்றிலுமாக தொடர்ந்து ஆடுகளை வளர்க்க இயலாத சூழலில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார தொழிலாக ஆடு வளர்ப்பு தொடர்ந்து செய்யும் விதமாக உடனடியாக ஆடுகளை கொல்லும் தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மனுவை கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் மேலும் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...