தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேர் கைது

மே 15, கோவையில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய அருகே உயர் ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாக ரகசிய தகவல். சோதனையில் 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டெடுப்பு; 6 பேர் கைது.


Coimbatore:

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதைப் பொருள் விற்பனை செய்யும் சம்பவம் இன்று (மே 15) கண்டறியப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி, சிறப்பு காவல் படை தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தியது. அங்கு 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40), இத்ரிஷ் அலி மனைவி ஜஹீரா கா துன்(29), எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29), அலிஹீசைன் மனைவிகுதிஜா கா துன்(37), மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து ரூபாய் 2,10,000 மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1,900 பிளாஸ்டிக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...