சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Coimbatore:சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமானதால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதங்களில் 5 அடிக்கும் குறைவான அளவே நீா் இருந்தது. 

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 10 அடியாக உயா்ந்துள்ளது. 

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...