ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் கொச்சி விமான நிலையத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸ் கைது

துபாய் செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸை, அதிகாரிகள் கைது செய்து நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: மலையாள திரைப்படத் தயாரிப்பாளா் ஜானி தாமஸ், கனடாவில் வசிக்கும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த துவாரகா உதயசங்கரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில், துபாய்க்கு செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜானி தாமஸ், நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், குற்றப் பிரிவு தனிப்படையினா் அவரை (மே.15) கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில் ஜான் தாமஸ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக உதயசங்கரிடம் இருந்து கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பணம் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...