பொள்ளாச்சி அருகே கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது

மீன்கரை-கிழவன் புதூர் ரோட்டில் போலீசார் நடத்திய ஆய்வில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 லாட்டரி டிக்கெட்டுகள், பணம் ரூ.8000, ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை-கிழவன் புதூர் ரோட்டில் ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று மே.15 மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேட்டைக்காரன் புதூர் சிவசங்கர் (வயது 28), மணிகண்டன் (வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து 400 லாட்டரி டிக்கெட்டுகள், லாட்டரி விற்ற பணம் ரூ.8000, ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...