மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மான்கள் உயிரிழப்பு

மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் தாக்கியதில் 3 மான்கள் உயிரிழந்ததாக மே 15ஆம் தேதி தகவல் கிடைத்தது.


கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவுக்கு உட்பட்ட மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மூன்று மான்கள் நாய்கள் துறத்துவதாக தகவல் கிடைத்தது. வன உயிரினங்கள் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்தன. மான்கள் உடலில் சிறு ரத்த காயம் இருந்தது.

விசாரணை அடிப்படையில் அந்த பகுதியில் நாய்களின் கால்தடம் பதிவாகி இருந்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு அறிவுரைப்படி வடவள்ளி கால்நடை மருத்துவமனைக்கு மான்கள் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாறு தகவல் வனத்துறை இன்று மே.16 தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...