மேட்டுப்பாளையத்தில் தனியார் சுற்றுலா பேருந்து மோதி வாலிபர் பலி - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நுழைவு வாயில் முன்பு நின்றிருந்த அடையாளம் தெரியாத நபரின் மீது பேருந்தை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே கடந்த 13 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வாலிபர் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து, பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ஆசிப் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று உடனடியாக தெரியவில்லை.

மேலும் அவர் மீது ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது தெரியவந்தது. பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் யார்?. அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்று விசாரணை செய்து வந்தனர். பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து ஒன்று அவர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் மீது ஏறி இறங்கிய சுற்றுலா பேருந்து சாம் டிராவல்ஸ் என்பதும், அந்த பேருந்து தினசரி பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.



பேருந்தில் அடிபட்டு வாலிபர் கீழே விழுந்ததும் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் ஆகியோர் அந்த வாலிபரை ஓரத்தில் படுக்க வைத்துவிட்டு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்தின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் ஊட்டியில் சுற்றுலாப் பேருந்தை நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

ஊட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை போலீசார் மேட்டுப்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்தில் அடிபட்டு இறந்த வாலிபர் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த சிசிடிவி வீடியோ தற்போது மே.17 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...