கோவையில் பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (17.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத்தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, அவிநாசி மேம்பாலம் கீழ் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ள சுமார் 100 HP திறன் கொண்ட 2 எண்ணிக்கையிலான இராட்சத டீசல் மோட்டார்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர்கள் சந்தியா(மேற்கு), இளங்கோவன்(பொ) (தெற்கு), உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், விமல்ராஜ், ராஜேஸ்வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்தின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...