கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக பதவி வகித்து வந்தவர் தா.மலரவன். இவர் 2001–2006 காலகட்டத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயராக இருந்தார். 2006 முதல் 2016 வரை 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்த நிலையில் தா.மலரவன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று (17-05-2024) காலை 11 மணியளவில் கணபதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு இன்று (மே.17) சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்தனை செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...