கோவை துடியலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழை

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், துடியலூர், சுந்தராபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்தது. கோவையில் வெயில் வாட்டிவந்தநிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும், மழை பெய்து வந்தது.



இந்த நிலையில் இன்று (மே.17) கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைதொடர்ந்து தற்போது மாலை, துடியலூர், சுந்தராபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் துடியலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மழை பெய்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...