திருப்பூரில் வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை என பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திருப்பூர் மாநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அவ்வப்பொழுது லேசான மழை இருந்து வந்தது.

இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் திருப்பூரில் 17ம் தேதி கனமழை செய்யும் எனவும், அதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.

மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழையானது பெய்யத் தொடங்கியது.



திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை என பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இந்த கன மழை காரணமாக சாலைகளில் மழைநீரானது கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி இந்த கன மழை காரணமாக சாலையோர கடைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் அங்கு வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலில் தாக்கம் குறைந்து திருப்பூர் மாநகர் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...