கரட்டுமேடு அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கரட்டுமேடு அருகே கைது. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க காவல்துறை சோதனை.


கோவை: கோவையில் போதைப்பொருட்கள் விற்பனை மூலம் சமூக பாதிப்பை ஏற்படுத்துவதை முற்றிலும் ஒழிப்பதற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் கரட்டுமேடு அருகே உடனடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு காளியப்பன் மகன் சேகர் (எ) நாய் சேகர் மற்றும் அப்பாஸ் மகன் சான்சா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றம் அனுப்பப்பட்டு காவலில் உட்படுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...