கோவையில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி தேய்க்கும் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (56). இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த (19.05.2023) அன்று அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் கடையில் தேய்ப்பதற்கு கொடுத்த துணிகளை வாங்க சென்றார்.

அப்போது ரவிக்குமார் சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு புரிந்துள்ளார். பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று மே.16 தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, பெண் போலீஸ் சுகன்யா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...