தாராபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம்பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் லேசாக பெய்ய துவங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.



இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் என்பதால் தங்களது பணியை முடித்துவிட்டு வரும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். மாலை வேலை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



இந்த மழை காரணமாக மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.



தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அமராவதி ரவுண்டானா பகுதி, பொள்ளாச்சி சாலை, பூக்கடைக்காரனர், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...