கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் - நான்கு பெண்கள் மீட்பு

கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த விபச்சாரத்தை ஆர்.எஸ்.புரம் போலீசார் கண்டுபிடித்து 4 பெண்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவை சுக்கிரார்பேட்டை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு நேற்று (மே. 16) மாலை தகவல் வந்தது. அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடக்கும் விபரங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை முடிவில், பாண்டிச்சேரி தமிழரசி (22), திருச்சி தேவி (23), விஷ்ணு பிரியா (23) மற்றும் பவானி விஷ்ணு பிரியா (23) ஆகிய 4 பெண்கள் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேனேஜர் சேலம் ஜெகதீஸ்வரன் (31) கைது செய்யப்பட்டார், உரிமையாளர் அரவிந்த் தாட்சன் தேடப்பட்டு வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...