கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் சார்பில் 500 மரங்கள் நடும் விழா

சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவை துவங்கி வைத்தனர். பின்னர் காவலர்கள் அனைவரும் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைப்படி கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 500 மரக்கன்றுகளை நடும் மரம் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு துவங்கி வைத்தனர்.



ஆயுதப்படை கவாத்து மைதானம் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் கையில் மரக்கன்றுகளை ஏந்தி மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என காவல் ஆணையர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோருடன் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...