கோவை மாவட்டத்தில் 605.6 மில்லி மீட்டர் மழை பதிவு - பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு

விமான நிலையம் 41.30 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 27 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 21.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 30.5 மி.மீ, பில்லூர் அணை 170 மி.மீ என கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தமாக 605.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான நிலை நிலவுகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.18 வெளியிட்டுள்ளது.



அதன்படி, கோவையின் பல்வேறு சுற்றுவட்டாரங்களில் நேற்று பெய்த மழை அளவு, விமான நிலையம் 41.30 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 27 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 21.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 30.5 மி.மீ,பில்லூர் அணை 170 மி.மீ, அன்னூர் 4.2 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 மி.மீ, சூலூர் 33 மி.மீ, வாரப்பட்டி 23 மி.மீ, தொண்டாமுத்தூர் 50 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 24 மி.மீ,மதுக்கரை தாலுகா 8 மி.மீ,போத்தனூர் ரயில் நிலையம் 10 மி.மீ, பொள்ளாச்சி 6 மி.மீ, மக்கினாம்பட்டி 7 மி.மீ,கிணத்துக்கடவு தாலுகா 31 மி.மீ, ஆனைமலை தாலுகா 1.2 மி.மீ, ஆழியாறு 51 மி.மீ, சின்கோனா 34 மி.மீ, சின்னக்கல்லார் 25 மி.மீ, சோலையார் 4 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 605.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 26.33 மி.மீ., சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...