உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று இரவு பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிக்கட்டு, முத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் வெயில் அடித்த காரணத்தால் காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்பொழது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தீடீரென தடை விகித்தனர்.



மேலும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனே அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...