குன்னத்தூர் குளம் தூர்வரும் பணி - கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் தொடக்கம்

135 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தூர்வாரப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், காட்டம்பட்டி மற்றும் குன்னத்தூர் ஊரட்சியில் அமைந்துள்ளது குன்னத்தூர் குளம். இந்த குளமானது மக்களால் காட்டம்பட்டி குளம், கடத்தூர் குளம் என்றழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் கடந்த ஐந்து வருடங்களாக களப்பணி செய்து, நீர் வழித்தடங்களை தூர்வாரி நீர் கொண்டு வந்தது, குளத்தை ஒட்டி 3500 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு உருவாக்கி பராமரித்து வருவது போன்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் செய்து வருகின்றனர்.



சுமார் 135 ஏக்கர் பரப்பளவு கொண்டகுன்னத்தூர் குளமானது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் தற்போதுதூர்வாரப்படுகிறது.



இதன் மூலம் குளத்தினுடைய நீர் சேமிப்பு திறன் அதிகப்படுத்தப்படும். வரக்கூடிய பருவமழை காலத்தில் பெறக்கூடிய நீரினை அதிக அளவில் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குளக்கரை பலப்படும்.இந்த நிலையில் இன்று (18.05.2024) காலை குன்னத்தூர் குளத்தை தூர்வாரும் பணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஸ்டல்லரிஸ் நிறுவனங்கள்சார்பில் மேலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கோகுல், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், கெளசிகா நீர்க்கரங்கள் செல்வராஜ்மற்றும் விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...