சிறப்பு குழந்தையை பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள் – கோவை ஆட்சியரிடம் மாணவனின் தாய் மனு

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற சிறப்பு குழந்தையை, கோவையில் உள்ள அரசு பள்ளிகள் சேர்க்க மறுப்பதாகவும், சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் மாணவனின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சிறப்பாக படித்து 10 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதிய அந்த மாணவன் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளான்.



அதை தொடர்ந்து மேல்நிலை கல்விக்காக பதினொன்றாம் வகுப்பில் சேர்த்தபோது, கோவையில் உள்ள அரசு பள்ளிகள் மறுப்பதாக குழந்தையின் தாயார் வேதனையுடன் தெரிவித்தார். சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும், தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள். எங்களுக்கு அந்த அளவிற்க்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.

மேலும் எந்த பள்ளியிலும் எனது மகனை சேர்க்காததால் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், அனைத்து திறமைகளும் கொண்ட எனது மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் உதவிபுரிய வேண்டும் என்றும் தாயார் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...