கவுண்டம்பாளையத்தில் கனமழை – சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


கோவை: கோவையில் கோடை மழை துவங்கி உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மே.18 தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது.

கோடை வெயில் காரணமாக மக்கள் அவதிக்கு உள்ளான நிலையில் தற்பொழுது பெய்து வரும் கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஓரிரு இடங்களில் பெய்த கன மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அதன்படி இன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...