வால்பாறையில் கனமழையால் பாறைகள் உருண்டு விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் நேற்று கனத்த மழையால் 16 வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தது; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மதியம் கனத்த மழை பெய்தது.



இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அட்டகட்டி பெய்த கனத்த மழையால் அப்பகுதியிலுள்ள 16 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது.



இதனால் அவ்வழியாக சென்ற பேருந்து மற்றும் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு பாறைகளை உடைத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தடைபட்ட போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...