பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜநகர் மற்றும் வாசவி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது.



நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்துவிட்டது. கிருஷ்ணவேணி ராஜநகர், ஜெய் கணபதி நகர், வாசவி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.



இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.



மேலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கே உள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது.



பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...