உடுமலை அருகே மீன்கள் மற்றும் கன்று குட்டிகள் இறப்பு - குடிநீர் மாசடையும் அபாயம்

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இன்று ஆயிரக்கணக்கான மீன்களும் ஒரு கன்றுகுட்டியும் மர்மமாக இறந்து கரை ஒதுங்கின. இதனால் குடிநீர் மாசடையும் அபாயமும் நிலவுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. மேலும் உடுமலை நகராட்சி மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம், சங்கரமநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் குடிநீர் வினியோகமும் நடைபெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அணையில் கட்லா,ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்ப்பும் நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கோடை வெப்பம் தாக்கம் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் திருமூர்த்தி அணையில் வளர்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அவற்றை பறவைகளும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளும் உணவாகக் கொண்டு வருகின்றன.



அரைகுறையான உடலுடன் அணை பகுதி முழுவதும் ஆங்காங்கே மீன்கள் செத்துக் கிடப்பதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. அத்துடன் குடிநீரும் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதன் விளைவாக மீன்கள் இறந்ததா? அல்லது தண்ணீர் மாசுபாட்டால் இறந்ததா என விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. மீன்கள் இறந்து வருவதால் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



இதே போன்று கன்று குட்டி சடலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. அவற்றை அகற்றுவதற்கும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அணை நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே திருமூர்த்தி அணை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ள மீன்கள் மற்றும் கன்று குட்டியை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மீன்கள் இறப்பு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...