கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகளை காண குவிந்த மக்கள்

கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். பல்வேறு பறவை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மே.19 அன்று குவிந்துள்ளனர்.


கோவை: வருடத்தில் கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் கால மாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும். குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்க கூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம் பெயரும். அதன்படி தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பெலிக்கான் பறவைகள் அதிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அதன்படி கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண்பதற்கு பல்வேறு பறவை ஆர்வலர்கள் இன்று மே.19 குவிந்துள்ளனர். பலரும் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.



மேலும் புகைப்பட கலைஞர்களும் அதிநவீன கேமராக்களை கொண்டு அப்பறவைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெலிக்கான் பறவைகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் இங்கு உள்நாட்டு பறவைகளான நாரை, கொக்கு உள்ளிட்டவைகளும் வந்துள்ளதால் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...