கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

பொள்ளாச்சியில், கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில் இன்று மே.19 பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் கோட்டூர் ரோடு மேம்பாலத்திற்கு கீழே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயேந்திரன் மகன் பரதன் மற்றும் ஐயப்பன் மகன் நவீன் குமார் ஆகியோர்களை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...