திருப்பூரில் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் கூடிய கருமேகங்களால் லேசான மழை பெய்ய துவங்கியது. சில நிமிடங்களில் லேசாக செய்ய துவங்கிய மழை கன மழையாக உருவெடுத்து கொட்டி தீர்த்தது.



இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையின் காரணமாக திருப்பூர் மாநகரின் ராயபுரம், கருவம்பாளையம், பிச்சம்பாளையம், குமார் நகர், ராக்கியாபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இதனடையை திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கனமழையின் போது அங்கு சுற்றித்திரிந்த சிறுவர்கள் சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் அவர்களின் பேருந்து நிலையத்தில் தேங்கி நின்றிருந்த மழை நீரை சேகரித்து விளையாடி மகிழ்ந்து மகிழ்ந்தனர்.



சிறுவர்களின் இந்த செயல் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் இடையே தங்களது சிறுவயது காலத்தை நினைவு படுத்தியது என்றே கூறலாம்.



இதனிடையே திருப்பூர் மாநகரில் பெய்த கன மழைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த மும்மூர்த்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக ஜெயலட்சுமி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இன்று பெய்த கன மழை காரணமாக அங்கு தாழ்வான பகுதிகளில் குடியிருந்த பொது மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் ஆனது புகுந்தது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர் பின்னர் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் வாலிகளை வைத்து வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்கினாலோ அல்லது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து தேங்கி இருந்தாலோ மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் மூலம் தண்ணீரை உறிந்து வெளியேற்ற வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...