கோவை உக்கடம் அன்பு நகரில் குப்பை கிடங்கால் நோய் பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

கோவை உக்கடம் பகுதியில் அன்பு நகர், பொன்விழா நகர் மற்றும் அருள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் குப்பைகிடங்கால் துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளன


Coimbatore: கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர்,பொன்விழா நகர்,அருள் நகர்,சூப்பர் கார்டன் ஆகிய பகுதிக்கு உட்பட்ட தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் குப்பை இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி இடம் பல முறை புகார் குறித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



குப்பையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் இதனால் இந்த குப்பையினால் இரண்டு உயிர்கள் பறிபோன போய் விட்டதாலும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் துர்நாற்றத்துடன் வாழ முடியவில்லை என்றும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



பொதுமக்கள் தினசரி கொசுக்கள் மற்றும் இத்தலைகளால் வாழ்ந்து வருவதாகவும் மாலை பொழுதிற்கு மேல் இப்பகுதியில் சுவாசிக்க முடியவில்லை என்றும் இரவில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குடிநீரிலும் துர்நாற்றம் வீசுவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...