டாஸ்மாக் கடை மூடலால் வேலையிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீதிமன்ற தீர்ப்பை தொடந்து தமிழகத்தில் 3339 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேளை இழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க கோரி மனு அளித்தனர்.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்குகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆனால் கடை சாவிகளை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்கமறுப்பதாகவும், இதனால் கடைகளில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...