கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம்

மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிராபகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடைபெற்ற மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10.05.2024 முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வருகின்ற 26.06.2024 நடைபெறவுள்ள மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும். கல்வி என்பது மிகவும் இன்றியமையாதவை ஆகும். கல்வி ஒன்று மட்டும் தான் இறுதி வரை நமது கூடவே இருப்பது ஆகும்.

எனவே, கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தினை மாணவ, மாணவியர்கள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...