கோவையில் ஹஜ் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹஜ் புனித பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


கோவை: 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (மே.20) காலையில் கோவை போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் PS உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார், ஹஜ்ஜின் உயிரோட்டம் என்னும் தலைப்பில் மௌலவி ரியாஸ் ஹஜ்ரத் உரை நிகழ்த்தினார்.



தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து அகன்ற திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் வழிகாட்டுதலை விளக்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை கோவை மத்திய மண்டல செயலாளர் முகம்மது சமீர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...