வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் பட்டு விவசாயிகள் மனு

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் பட்டு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுக்கூடு உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்,உதவி இயக்குனர் மனிஷாவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.



அதில், தமிழகம் முழுவதும் 25,000 மேற்பட்ட விவசாயிகள் பட்டு விவசாயம் செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருவதாகவும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்து பயன் அடைந்து வருவதாகவும், இந்த தொழிலுக்கு அடிப்படையான வீரியம் இல்லாத பட்டுப்புழுக்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் முழுமையாக தோல்வி அடைந்ததாகவும். இதற்கான காப்பீடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கீடு செய்தும், உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு ஒரு மூட்டை தொகுதிக்கு ரூ.நானூறு வீதம் கொடுத்து உதவுமாறு தமிழக அரசையும், பட்டு வளர்ச்சித் துறையும் கேட்டுக் கொள்வதாகவும் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...