கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (20.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100-வார்டு பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள நீர்நிலைகள், பாதாள சாக்கடைகள் மற்றும் மழைநீர் செல்லும் பகுதிகளில் உள்ள மண்கள், குப்பைகள் அகற்றும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளையும், முன்னதாக,



வார்டு எண்-95 போத்தனூர் மெயின் சாலை உம்மர் நகர் பகுதியில் மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பது குறித்து நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு சாக்கடைகளை முழுமையாக தூர்வார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளையும்,



மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.83 காளீஸ்வரா மில்ரோடு கீழ்பாலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளையும் மற்றும் லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர்கள் இளங்கோ (பொ), கவிதா, செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், பரமசிவம், குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...