வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் தொழில் முனைவோர் பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா

விற்பனை நிலையத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய பிஸ்கட், நூடுல்ஸ், சத்து மாவுகள், சிறுதானிய தோசை மாவுகள், லட்டு, மிட்டாய், தயார்நிலை உணவுகள், சிறுதானிய பொரி உருண்டைகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய தொழில் முனைவோர் பொருட்கள் விற்பனை நிலையத்தை (TBI Incubatee Product Promotional Centre -TIPPC) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் முனைவர்.வெ.கீதாலட்சுமி, 20.05.2024 திறந்து வைத்தார்.



இத்திறப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். இரா.தமிழ்வேந்தன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் முனைவர். E.சோமசுந்தரம், தொழில் நுட்ப வணிக காப்பக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி A.V.ஞானசம்பந்தம், பல்கலைக்கழக அதிகாரிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், இயக்குனர் முனைவர்.E.சோமசுந்தரம், தொழில்நுட்ப வணிக காப்பகம், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி A.V.ஞானசம்பந்தம் முதல் விற்பனை செய்யப்பட்டு, துணைவேந்தர் பேராசிரியர் முனைவர். வெ. கீதாலட்சுமி பெற்றுக்கொண்டார். தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் சுமார் 560க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இத்தொழில் முனைவோர்களின் தர நிர்ணயம் செய்யப்பட்ட சிறந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், விற்பனையை மேம்படுத்துவதற்காகவும் தொழில் முனைவோர் பொருட்கள் விற்பனை நிலையம் TIPPC துவங்கப்பட்டுள்ளது.



இவ்விற்பனை நிலையத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய பிஸ்கட், நூடுல்ஸ், சத்து மாவுகள், சிறுதானிய தோசை மாவுகள், லட்டு, மிட்டாய், தயார்நிலை உணவுகள், சிறுதானிய பொரி உருண்டைகள் உள்ளன. மேலும் பாரம்பரிய அரிசி வகையிலிருந்து செய்யப்பட்ட மதிப்புக்கூட்டபட்ட உணவுப்பொருட்கள், தயார்நிலை மசாலா பொருட்கள், முருங்கை மற்றும் மூலிகை சூப் பொடிகள், சோயா பன்னீர், காளான், தென்னை நீரா, மரச்செக்கு சமையல் எண்ணெய்கள், மஞ்சள், தேன், மதிப்புக்கூட்டப்பட்ட சுருள் பாசி உணவுப் பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.



சரும நலம் மற்றும் உடல் நலத்திற்கான இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு, பூஜை பொருட்கள் உள்ளன. மூங்கில் கைவினை பொருட்களான சீப்பு, பொம்மைகள், பென்சில் பேனா போன்றவையும் தென்னை சிரட்டையில் செய்யப்பட்ட பொம்மைகள், ஐஸ்கிரீம் கப், இரவு விளக்குகள், ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப வணிகக் காப்பக உறுப்பினர்களின் சிறந்த பொருட்களை ஓர் குடையின் கீழ் விற்பனைக்கு கொண்டு வந்து அவர்களின் தொழிலை மேம்படுத்துவது தொழில்நுட்ப வணிக காப்பத்தின் தொழில் முனைவோர் பொருட்கள் விற்பனை நிலையத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் ஊழியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக குடியிருப்போர் மற்றும் விருந்தினர்ளுக்கு பயன் தரும் வகையிலும் இந்நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...