கோவை – மயிலாடுதுறை ரயிலில் மழை நீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் அவதி

கடந்த தினங்களுக்கு முன்பு சென்னை-கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் அருவியாக ஊற்றியது குறிப்பிடத்தக்கது.


Coimbatore: தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் இரயில் இதுவாகும். நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் (மே.20) கரூர்-ஈரோடு இடையில் பெய்த கனமழையில் மழை நீர் ரயில் பெட்டிக்குள் (D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை நீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்பை வைத்து மழை நீர் விழுகாதவாறு செய்தனர்.



கடந்த தினங்களுக்கு முன்பு சென்னை-கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் அருவியாக ஊற்றியது. இந்நிலையில் கோவை- மயிலாடுதுறை சதாப்தி ரயிலிலும் மழை நீர் ஒழுகுவதால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென பயணிகள் தற்போது (மே.21) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...